செய்திகள் :

சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்றம்!

post image

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள ஜாவோடொங் எனும் மலை நகரத்தில் பெய்து வரும் கனமழையால் 5 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜாவோடொங் நகரத்தில், கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள ஏராளமான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெயிக்ஸின் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், அங்கிருந்த 2 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் மாயமாகியுள்ளனர். இதனால், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அங்குள்ள ஏராளாமான இடங்களில் கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சிச்சுவான் மாகாணத்தில் பெய்த கனமழையால், ஷிசூவாங் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் மாயமாகினர். செங்கோதொங் நகரத்தில் நிலச்சரிவால் 24 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத்துடன், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், வரக்கூடிய நாள்களில் கனமழை அதிகரிக்கும் என்பதால் அங்குள்ள ஆறுகளின் அருகில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் நீர்வளத் துறை அமைச்சகம், குவாங்தொங் மாகாணத்துக்கு 4-ம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அம்மாகாணத்தில், இன்று (ஜூலை 9) முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஜெஜியாங், ஃபுஜியான், சோங்கிங் மற்றும் சிச்சுவான் ஆகிய மாகாணங்களுக்கு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அமைச்சகம் நான்காம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Five people are reported missing after heavy rains hit the mountain town of Zhaodong in China's Yunnan province.

இதையும் படிக்க: பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

பாகிஸ்தான் - சீனா - வங்கதேசம் கைகோப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல: முப்படை தலைமைத் தளபதி எச்சரிக்கை

பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டு சோ்வது, இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களில் தீவிர விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் எச்சரித்துள்ளாா... மேலும் பார்க்க

இந்தியா-நமீபியா இடையே 4 ஒப்பந்தங்கள் - பிரதமா், அதிபா் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நமீபியா இடையே சுகாதாரம், தொழில்முனைவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. நமீபிய தலைநகா் விண்ட்ஹோக்கில் அந்நாட்டு பெண் அதிபா் நெடும்போ நான்டி என்டியெயிட்வாவ... மேலும் பார்க்க

போப் பதினான்காம் லியோவுடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு!

இத்தாலி தலைநகர் ரோமில், உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி, போப் பதினான்காம் லியோவை சந்தித்து, ரஷியாவுடனான போரின் பாதிப்புகள் குறித்து உரையாடியுள்ளார். ரோமில் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ... மேலும் பார்க்க

லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!

லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் கட்டமைப்புகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் தகர்க்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா க... மேலும் பார்க்க

பயங்கரவாதியல்ல, குடிமகன்! வசமாக சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், பயங்கரவாதியை, சாதாரண குடிமகன் என்று நம்ப வைக்க முயன்று, வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொ... மேலும் பார்க்க