பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்
சீனா - நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி..20 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!
சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின், எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியதுடன், 20 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது.
சீனாவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி இரவு தொடர் கனமழை பெய்துள்ளது. இதனால், அண்டை நாடான நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடெகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 9 பேரின் உடல்கள் தாதிங் மற்றும் சிட்வான் ஆகிய மாவட்டங்களில் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 6 சீனர்கள் உள்பட 20 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், நேற்று (ஜூலை 8) அதிகாலை 3.15 மணியளவில் அங்கு அமைந்திருந்த சீனா - நேபாளம் எல்லைப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான மீட்புப் படையினர் குவிக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இத்துடன், வெள்ளத்தில் அம்மாவட்டத்தின் 4 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளதால், 211 மெகா வாடஸ் அளவிலான மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.