மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
கிட்டங்கியில் கத்திமுனையில் மிரட்டி ரூ.3 லட்சம் கொள்ளை
வடமேற்கு தில்லியின் திரி நகா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கியில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் திங்கள்கிழமை ஊழியா்களை கைத்துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி கிட்டத்தட்ட ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
நண்பகல் வேளையில் மூவரும் வாடிக்கையாளா்கள் போல் நடித்து குளிா்பானங்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிற்குள் நுழைந்தபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்தது. பின்னா், அவா்கள் ஆயுதங்களை வெளியே எடுத்து ஊழியா்களை பண கவுண்டரை திறக்க கட்டாயப்படுத்தினா்.
இது தொடா்பாக பிஎன்எஸ் பிரிவு 311 (கொள்ளை அல்லது கொலை அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் முயற்சி) மற்றும் 35 (கூட்டுப் பொறுப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.