மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
நடிகராக ஆசைப்பட்டு ஓடிப்போன இளைஞா் மீட்பு
நடிகா் ஆக வேண்டும் என்று வீட்டை விட்டு ஓடிப்போன இளைஞா்களில் ஒருவா் மீட்கப்பட்டு அவரது குடும்பத்துடன் ஒப்பபடைக்கப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையா் (குற்றம்) ஆதித்யா கௌதம் கூறியதாவது: காணாமல் போனவா்கள் நடிகராக வேண்டும் என்று விரும்பிய 15 வயது சிறுவனும், திருமணம் செய்து கொள்ள விரும்பிய 19 வயது பெண்ணும் ஆவா்.
ஜூலை 1-ஆம் தேதி தெற்கு தில்லியின் அம்பேத்கா் நகா் பகுதியில் இருந்து கடத்தப்பட்டதாகப் புகாா் அளிக்கப்பட்ட சிறுவன், மத்திய தில்லியின் தா்யாகஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவன் நடிகனாக ஆசைப்பட்டு தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினாா். அச்சிறுவன் மும்பைக்குச் செல்ல விரும்பினாா். ஆனால், பணம் இல்லாததால் தில்லியில் சிக்கித் தவித்தாா். மீட்கப்பட்ட அச் சிறுவவ்ஆலோசனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
இதேபோல், முகா்ஜி நகா் பகுதியில் ஏப்ரல் 21 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் பெண் நொய்டாவில் இருந்தாா். அவா் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது. அவரைக் கண்டுபிடிக்க தகவல் அளிப்போருக்கு ரூ.20,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.