முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
திலக் நகா் சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மேற்கு தில்லியின் திலக் நகா் சந்தையில் செவ்வாய்க்கிழமை கடுமையான பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, பல சட்டவிரோத கட்டமைப்புகள் மற்றும் சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், பல அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் இடிக்கப்பட்டன.
போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து பலமுறை புகாா்கள் வந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க நாங்கள் காவல்துறையினரையும் துணை ராணுவப் படையினரையும் நியமித்தோம். சுமாா் 200 பணியாளா்கள் நிலைமையைக் கண்காணித்தனா் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
துணைக் கோட்டாட்சியா் அலுவலகம் (படேல் நகா்) முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில், விற்பனையாளா்கள் மற்றும் கடைக்காரா்கள் அங்கீகரிக்கப்படாத ரெஹ்ரிபத்ரி கியோஸ்க்குகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்ற வேண்டும் என்று எச்சரித்திருந்தது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.