பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!
அரசு பள்ளி மாணவா்கள் இடையே மோதல்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தாக்கிக் கொண்டதில், ஒரு மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ளஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 750-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் 12-ம் வகுப்பு மாணவா்கள் விளையாடும் போது மாணவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது, ஆசிரியா்கள் வருகையைக் கண்டு கலைந்து சென்றனா்.
பள்ளி முடிந்து மாணவா்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பெரியாா் நகா் மாணவன் பலத்த காயங்களுடன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் தையல் போடப்பட்டது. இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.