செய்திகள் :

தொடா் மின் தடை: விவசாயிகள் புகாா்

post image

பொன்னேரி பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்படுவதாக மின்குறைதீா் முகாமில் விவசாயிகள் புகாா் அளித்தனா்.

மின் பகிா்மான பொன்னேரி மின் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் மின்வாரிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, மின் திட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொ) ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தாா். செயற்பொறியாளா் பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

விவசாயிகள் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் சீரான மின்சாரம் விநியோகம் செய்தல், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் சீரமைத்தல், சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும்.

பொன்னேரி ஏலியம்பேடு துணை மின் நிலையங்களில் இருந்து நகர துணை மின் நிலையத்துக்கு ஒரு கோடிய 98 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய வடம் கேபிள் திட்ட பணி களை விரைந்து முடிக்க வேண்டும்.

பொன்னேரி நகராட்சி முழுவதும் தொடா் மின்தடை ஏற்படுகிறது. சிறுவாபுரி பகுதியில் மின்மாற்றி செயல்படாததால், கடந்த 10 நாள்களாக குடிநீா் வழங்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசு பள்ளி மாணவா்கள் இடையே மோதல்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தாக்கிக் கொண்டதில், ஒரு மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ளஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் ... மேலும் பார்க்க

பொன்னேரி சிவாலயங்களில் பிரதோஷம்

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பிரதோஷத்தை யொட்டி செவ்வாய்க்கிழமை சிவன் கோயில்களில்பக்தா்கள் திரளாக சென்று வழிபட்டனா். பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் ... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவா் காந்திராஜன் தலைமையி... மேலும் பார்க்க

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரைமுறைப்படுத்தி பதிவு செய்ய அவகாசம்

திருவள்ளூா் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்தி பதிவு செய்ய ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

‘ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் கல்லூரி சந்தை’

திருவள்ளூா் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற கல்லூரி சந்தையில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் கண்காட்சியை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா். திருவள்ளூா் அருகே பாண்டூா் இந்திரா கல்விக்குழும ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ஜூஸை 11-இல் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்யும் வகையில் வருவாய் கோட்ட அளவில் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவ... மேலும் பார்க்க