செய்திகள் :

திருப்பதி: நடத்தை விதி மீறல்... தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்ட தேவஸ்தான அதிகாரி சஸ்பெண்ட்!

post image

தேவாலய பிரார்த்தனை கலந்துகொண்டதற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தனது நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

ராஜசேகர் பாபு என்பவர் திருப்பதி கோயில் நிர்வாகமான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

திருப்பதி மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான புத்தூரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாக வெளியான தகவல் திருப்பதி தேவஸ்தானத்தை எட்டியிருக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)

மேலும், தேவாலயத்திற்குச் சென்று அவர் பிரார்த்தனை செய்வதாக ஒரு வீடியோ வைரலானது.

இந்த நிலையில்தான், அவரின் இந்தச் செயல் இந்து அறக்கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை நேரடியாக மீறியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்து மதம் அல்லாத பிற மத செயல்பாடுகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராஜசேகர் பாபு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கை தொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜசேகர் பாபு தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் தவறாமல் கலந்துகொள்வது எங்களின் கவனத்திற்கு வந்தது.

அவரின் இத்தகைய நடத்தை தேவஸ்தான விதிமுறைகளை மீறும் செயல். ஒரு இந்து மத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நடத்தை விதிகளை அவர் பின்பற்றத் தவறிவிட்டார். பொறுப்பற்ற முறையில் செயல்பட்டார்.

இந்த விவகாரத்தில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் அறிக்கை மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர் அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது!" - நீதிமன்றம் உத்தரவு; பயணிகள் அச்சம்

தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 70-க்கும் அதிகமான இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த சுங்கச்சாவடிகளின் வழியாகப் பயணம் செய்வதற்கு கார், வேன், லாரி, பேருந்துகள் உள்ளிட்டவை சுங... மேலும் பார்க்க

கரூர்: ``என் குரல் பெண் குரல்போல இருப்பதால், பாலியல் சீண்டல் செய்கிறார் ஆசிரியர்'' - மாணவர் புகார்

கரூரில் பெண் குரல் போல இருக்கும் மாணவரை பள்ளி ஆசிரியர் கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்வதாக பாதிக்கப்பட்ட அம்மாணவர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருக்கிறார்.10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், தன... மேலும் பார்க்க

Andhra: ``அவர்க்கு பைத்தியம் பிடிச்சிருச்சு'' - பவன் கல்யாண் மீது முன்னாள் அமைச்சர் ரோஜா காட்டம்

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆந்திர முன்னாள் அமைச்சராக இருந்தவர் ரோஜா. கடந்த 2024 ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சி ஆட்... மேலும் பார்க்க

``ஆட்சியாளர்களுக்கு பயம்; காவல்துறையை ஏவி எங்களை தடுக்கின்றனர்..’’ - கொந்தளிக்கும் வேலூர் அதிமுக

வேலூரில், `கடந்த ஜூன் 25-ம் தேதி முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட அரசு பென்ட்லேண்ட் பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை’ எனக் குற்றம்சாட்டி, வேலூர் அண்ணா கலையரங்கம் அர... மேலும் பார்க்க

20 பாட்டில் விஷ முறிவு மருந்து; 72 மணி நேர போராட்டம்-11 வயது சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பட்லுார், சொக்கநாத மணியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர். இவரது மகன் ஜெயசூர்ய குமார் (11).அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூன் 26-ஆம் ... மேலும் பார்க்க

சென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவு; அச்சத்தில் மக்கள் - ஸ்பாட் விசிட்

சென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெருங்குடி அருகே சாலையில் ஏற்பட்ட பிளவுசென்னை: பெரு... மேலும் பார்க்க