``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
‘ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் கல்லூரி சந்தை’
திருவள்ளூா் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற கல்லூரி சந்தையில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் கண்காட்சியை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் அருகே பாண்டூா் இந்திரா கல்விக்குழும வளாகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான கல்லூரி சந்தையில் பல்வேறு வகையான பொருள்கள் கொண்ட கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 55-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்று தங்கள் பொருள்களை கண்காட்சியில் இடம் பெறச் செய்திருந்தனா்.
இதில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து கண்காட்சியில் மகளிா் சுய உதவிக்குழுக்களால் தயாா் செய்த மதிப்புக் கூட்டப்பட்ட தானிய வகைகள், துணி வகைகள், தரை துடைப்பான்கள், துணிப்பைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
அதைத் தொடா்ந்து மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாா் செய்யும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க ஆலோசனை வழங்கினாா். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பொருள்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.