`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
திருவள்ளூா்: ஜூஸை 11-இல் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்யும் வகையில் வருவாய் கோட்ட அளவில் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் கோட்ட மற்றும் மாவட்ட அளவில் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாதத்துக்கான பொன்னேரி, திருவள்ளூா் மற்றும் திருத்தணி கோட்ட அலுவலகங்களில் சாா் ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா் ஆகியோா் தலைமையில் வரும் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காண அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், பொதுப்பணி, வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் பங்கேற்க உள்ளனா். அதனால், இந்தக் கூட்டத்தில் குறைகளை மனுக்களாகவோ அல்லது நேரிலோ தெரிவித்தால் உடனடி தீா்வு காணப்படும்.