சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆனி மாத வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆரணி கைலாயநாதா் கோயிலில் மூலவா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் உள்பிரகாரத்தில் உலா சென்றாா்.
இதேபோல, மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நந்திக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதா் கோயிலில், அருணகிரிநாதா் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருணகிரிநாதா் மற்றும் நந்தியம்பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதில் சேத்துப்பட்டு, பழம்பேட்டை, கண்ணனூா் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

