தொழிலாளி மீது தாக்குதல்: தம்பதி கைது
வந்தவாசி அருகே தொழிலாளியை தாக்கியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
ஆவணவாடி அருந்ததியா்பாளையத்தைச் சோ்ந்தவா் குமரேசன். இதே பகுதியைச் சோ்ந்தவா் பத்திர எழுத்தா் துரை.
குமரேசனின் தந்தை கிருஷ்ணன் பெயரிலிருந்த விவசாய நிலத்தை குமரேசன் பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்து தந்தது தொடா்பாக துரைக்கு குமரேசன் பாக்கிப் பணம் தர வேண்டுமாம்.
இந்த நிலையில் துரை, இவரது மனைவி ஈஸ்வரி, துரையின் அண்ணன் தருமன் ஆகிய 3 பேரும் குமரேசனிடம் பாக்கி பணத்தை கேட்டு, அவரையும், அவரது மனைவி தனத்தையும் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், பொன்னூா் போலீஸாா் 3 போ் மீது வழக்குப் பதிந்து துரை, ஈஸ்வரி ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.