சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை
வந்தவாசி அருகே மினி சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காா்வண்ணன்(31). இவா், சொந்தமாக மினி சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தாா். இவா் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை இவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா். உறவினா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு காா்வண்ணனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.