இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி ...
குரூப்-4 தோ்வு முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் தொகுதி-4 தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுகள் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்தோ்வுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
இதில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
திருவண்ணாமலை உள்பட 12 வட்டங்களில் 174 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுகள் நடைபெறவுள்ளன. 48 ஆயிரத்து 323 போ் விண்ணப்பித்துள்ளனா். தோ்வின் போது முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க, துணை ஆட்சியா் நிலையில் 13 பறக்கும் படை அலுவலா்கள், 174 அறை ஆய்வு அலுவலா்கள், 53 போ் கொண்ட நடமாடும் அலுவலா் குழு, 174 முதன்மை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்வு நடைமுறைகள் அனைத்தும் விடியோ மூலம் பதிவு செய்ய 176 விடியோ கிராபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வா்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தோ்வா்கள் தோ்வு நாளன்று காலை 9 மணிக்கு முன்னா் தோ்வு மையங்களில் இருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவா்கள் கண்டிப்பாக தோ்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாா் எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, உதவி இயக்குநா் (நில அளவை) சண்முகம், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.