செய்திகள் :

ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ்.. ரோல்ஸ் ராய்ஸின் புதிய அறிமுகம்!

post image

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ் கார் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சொகுசு கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிளாக் பேட்ஜ் எனும் மின்சார வாகனத்தை சந்தையில் வெளியிட்டுள்ளது. இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

2024 இல் ரோல்ஸ் ராய்ஸ் மின்சார ஸ்பெக்டர் 2 டோர் கிராண்ட் டூரரை இந்தியாவில் ரூ.7.5 கோடியில் அறிமுகப்படுத்தியது. அதிகபட்சமாக வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ் காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இடம் பெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக 650 பிஎச்பி பவரையும், 1,075 என்எம் டார்கையும் வெளிப்படுத்தும். இதன் ஸ்டாண்டர்டு வேரியண்டுடன் ஒப்பிடுகையில் அதிக பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்துகிறது.

இது வெறும் 4.1 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். இதில் 102 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.

ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜ் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில், ஒளிரும் ஃபேசியா, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேவுக்கு ஐந்து வண்ணத் தேர்வுகள், மெட்டாலிக் மற்றும் கார்பன் ஃபைபருடன், நேர்த்தியான தோலால் செய்யப்பட்ட சீட் என பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஷோரூம் விலை சுமார் ரூ. 9.5 கோடி, ஸ்டாண்டர்டு வேரியண்டை விட சுமார் ரூ. 1.88 கோடி அதிகமாகும். தில்லி மற்றும் சென்னை ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம்களில் ஸ்பெக்டர் பிளாக் பேட்ஜுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

Rolls-Royce has launched the Spectre Black Badge car in the Indian market.

கார்களின் விலையை உயர்த்திய டாடா நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் அதனுடைய கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது.டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் கர்வ் மாடலின் விலையை உயர்த்தியது, தற்போது டியாகோ, கர்வ், டியாகோ என... மேலும் பார்க்க

மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏ.எம்.ஜி ஜிடி 63 மற்றும் ஜிடி 63 புரோ ஆகிய கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பம்சங்கள் என்ன?இது பரிணாம வளர்ச்சியுடன் கூடிய வடிவமைப்பைப் பெறுகிறது. எல்இ... மேலும் பார்க்க

லெவல் 2 அடாஸ் வசதியுடன்.. மஹிந்திராவின் புது வேரியண்ட்!

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் லெவல் 2 அடாஸ் வேரியண்டை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சிறப்பம்சங்கள் என்ன?ஸ்கார்பியோ என் அடாஸ் வேரியண்டில் புதிய அம்சமாக லெவல் 2 அடாஸ் இடம் பெற்றுள்ளது. இத... மேலும் பார்க்க

ஹார்லி டேவிட்சன் பிரியர்களுக்கு.. புதிய அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் பிரியர்களுக்காக புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டிரீட் பாப்(street bob) பைக்கை இந்தியச் சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது.இருசக்கர வாகனங்களில் ஹார்லி டேவிட்சன் என்றாலே எப்போதும் தனி மவுசு தான்... மேலும் பார்க்க

டிரையம்ப் ஸ்பீடு.. இப்போது புதிய வண்ணங்களில்!

டிரையம்ப் நிறுவனம் இப்போது புதிய வண்ணங்களில் ஸ்பீடு டி4 என்ற பைக்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. என்னென்ன சிறப்பம்சங்கள்..டிரையம்ப் ஸ்பீடு விரும்பும் ரைடர்களுக்காவே இந்திய சந்தையில் பல்வேறு வண்ணங்க... மேலும் பார்க்க