கார்களின் விலையை உயர்த்திய டாடா நிறுவனம்!
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் அதனுடைய கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் கர்வ் மாடலின் விலையை உயர்த்தியது, தற்போது டியாகோ, கர்வ், டியாகோ என்ஆர்ஜி மற்றும் டிகோர் உள்ளிட்ட மாடல்களின் விலையை அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கர்வ் கூப்-எஸ்யூவி மாடலின் விலையை உடனடியாக அமல்படுத்தும் வகையில் திருத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம் கர்வ் மாடலின் விலை இப்போது மாறுபாட்டைப் பொறுத்து ரூ.13 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
அதேபோன்று டியாகோவின் அடிப்படை XE பெட்ரோல், XE iCNG வகைகள் எந்த மாற்றத்தையும் காணவில்லை, மேலும் அவை ரூ.5 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன.
XM பெட்ரோல், XZ பெட்ரோல், XZ+ பெட்ரோல், XZA பெட்ரோல், XM iCNG, XZ iCNG மற்றும் XZA iCNG வகைகள் முந்தைய விலைப் பட்டியலை விட ரூ. 10 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது.
அடுத்து, டியாகோவின் XT பெட்ரோல், XTA பெட்ரோல், XT iCNG மற்றும் XTA iCNG வகைகள் ஒவ்வொன்றும் ரூ.5,000 அதிகமாக உள்ளன. இந்த மாடலின் விலைகள் இப்போது ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 8.55 லட்சம் வரை உயர்ந்துள்ளன.
வாடிக்கையாளர்கள் பெட்ரோல், சிஎன்ஜி பவர்டிரெய்ன்களை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அமைப்புகளிலிருந்து கார்களை தேர்வு செய்யலாம்.