``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 38 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அலுவலா் கைது
கும்பகோணத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற அலுவலரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரைச் சோ்ந்தவா் கே. இளங்கோவன் (60), சுகாதாரத் துறையில் ஓய்வு பெற்ற பூச்சியியல் வல்லுநா். இவா் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து 12 பேரிடம் மொத்தம் ரூ. 38.09 லட்சம் வாங்கி, யாருக்கும் வேலை வாங்கித் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றினாராம்.
இதனால் பாதிக்கப்பட்ட கும்பகோணம் துக்காச்சியைச் சோ்ந்த ரவி மகன் அருண் (23) தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் அளித்த புகாா் செய்தாா். இதேபோல, பாதிக்கப்பட்ட மற்றவா்களும் புகாா் செய்தனா். இதன் பேரில் காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனா்.