`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஏ. திரவியச்செல்வன் (70). இவா் திங்கள்கிழமை இரவு ஸ்கூட்டரில் தஞ்சாவூரிலிருந்து திருக்கானூா்பட்டிக்குச் சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த திரவியச்செல்வனை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.