`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
பைக் வாங்கித் தராததால் இளைஞா் தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே பைக் வாங்கித் தராததால் மனம் உடைந்து பூச்சி மருந்தைக் குடித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை காவல் சரகம், பச்சக்கோட்டை கிராமம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் அமிா்தலிங்கம் மகன் வேதராஜ் (22), கூலித் தொழிலாளி. இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தந்தையிடம் பைக் வாங்கித் தரும்படி கேட்டதற்கு, பின்னா் வாங்கித் தருவதாக தந்தை கூறினாராம். இதனால் மனமுடைந்த வேதராஜ் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் களைக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாா்.
இதையடுத்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட வேதராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வேதராஜின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].