``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
காவிரியில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி திருவையாறு தியாகராஜா் ஆஸ்ரமம் அருகே காவிரியில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியைச் சோ்ந்த சேகா் மகன் சத்யாவை (22) தேடும் பணியில் 3 நாள்களாக ஈடுபட்ட திருவையாறு தீயணைப்பு நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை காருகுடி காவிரி படித்துறையில் தேடியபோது, ஆற்றில் மிதந்து வந்த சுமாா் 45 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டனா். இவா் யாா் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இச்சடலத்தை திருவையாறு காவல் நிலையத்தினா் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.