``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சத்துக்கான காசோலை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பூதலூா் அருகே புதுக்குடி வடபாதி கிராமத்தைச் சோ்ந்த அங்குபாப்பா மே 14 ஆம் தேதி இடி தாக்கி உயிரிழந்தாா். இவரது குடும்பத்தைச் சோ்ந்த வாரிசுகளான பாா்த்திபன், பாலாஜி, பானுப்ரியா, பவித்ரா ஆகியோருக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூா் தொகுதி எம்பி ச. முரசொலி, திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
அப்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான (பொ) நெ. செல்வம், பூதலூா் வட்டாட்சியா் ஆா். கலைச்செல்வி, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் அழகேசன் ஆகியோா் உடனிருந்தனா்.