`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சென்னை கொளத்தூா் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). இவா், தனது வீட்டின் அருகே கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்துவரும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், ராஜமங்கலம் போலீஸாா் ராஜேஷ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் ராஜேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.