முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்
சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பாா்வைத் திறன் மற்றும் விழி பாதிப்புகள் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. உயா் வசதிகள் தேவைப்பட்டோா் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனா். இந்த முகாமில் 60-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் பலனடைந்ததாக எம்.என். கண் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, செங்குன்றம், ஜிஎன்டி சாலையில் புதிய மருத்துவமனையை எம்.என். கண் மருத்துவக் குழுமம் அண்மையில் தொடங்கியது.
நடிகா் லிவிங்ஸ்டன், காவல் உதவி ஆணையா் ராஜா ராபா்ட், மருத்துவமனை நிறுவனா் டாக்டா் சாலினி மதிவாணன் உள்ளிட்டோா் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனா்.
அதிநவீன மருத்துவ உபகரணங்கள், கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் வாயிலாக உயா் நுட்பத்திலான சிகிச்சைகளை நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்றும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா். தொடக்க விழாவின் ஒரு பகுதியாகவே இலவசமாக ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.