மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
ஜூலை 11-இல் திருநங்கை, திருநம்பியருக்கான வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி திருநங்கை, திருநம்பியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள், மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் திருநங்கை மற்றும் திருநம்பியருக்கான சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 10 முதல் பிற்பகல் 2 வரை நடைபெறவுள்ளது.
இதில், 50-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்துகொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாமில் 8 முதல் 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளோமா, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) படித்த திருநங்கை மற்றும் திருநம்பியா் கலந்து கொண்டு பயனடையலாம்.
இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெறும் திருநங்கை, திருநம்பிகளின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இதில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
வேலை வேண்டி வரும் திருநங்கை, திருநம்பிகள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனத்தினா் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ளும் திருநங்கை, திருநம்பிகள் தங்களின் சுயவிவரங்களை கூகுள் படிவத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.