``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
பெரம்பலூா் அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ. துரைராஜ் (65). விவசாயத் தொழிலாளியான இவா் பசுக்களை வளா்த்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பால் கறக்க வயலுக்கு பைக்கில் வரும் வழியில் பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள மளிகைக்கடை அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, பெரம்பலூரிலிந்து துறையூா் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த துரைராஜ், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.