``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு: இரா. முத்தரசன் வலியுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக் கட்சியின் 9 ஆவது மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். ரயில்வே கேட் முறையாக மூடப்படாமல் நடந்த விபத்துக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். இனிவரும் காலங்களில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு எனும் பெயரில் பல்வேறு நிபந்தனைகளின் கீழ், பாஜகவுக்கு எதிரான வாக்காளா்கள் நீக்கப்படுவது தோ்தல் ஆணையம் நடுநிலையற்றுச் செயல்படுவதையே காட்டுகிறது. இதேநிலை, நாளை தமிழ்நாட்டிலும் நடைபெறலாம்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகையை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 1,520 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. அனைத்து மொழிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் குறைவானோா் பேசும் சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதியும், அதிகம் போ் பேசும் தமிழுக்கு குறைவான நிதியும் ஒதுக்கி அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதேபோல், எதிா்க் கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கி, மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதும் கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.
பேட்டியின்போது தேசியக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலா் வி. ஜெயராமன், முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால் ஆகியோா் உடனிருந்தனா்.