லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
பெரம்பலூரில் பகுதிநேர ஆசிரியா்கள் 11 போ் கைது
சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் 11 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பகுதிநேர ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெறும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க சென்னை செல்லமுயன்ற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் 11 பேரை பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை நள்ளிரவு முன்னெச்சரிக்கையாக கைது செய்தனா். பின்னா், பெரம்பலூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 11 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை விடுவித்தனா்.