``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
திருமானூா் அருகே குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீண்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ராட்சத குடிநீா்க் குழாய் உடைப்பால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வீணாகி வருகிறது.
திருமானூரை அடுத்த திருமழபாடி அருகேயுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் அரியலூா் நகரப் பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருமழபாடியில் இருந்து 28 கிலோ மீட்டா் தூரம் வரையுள்ள குடிநீா்க் குழாய்களில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு லட்சக் கணக்கான லிட்டா் தண்ணீா் வீணாவதும், சீரமைப்பு நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், அரண்மனைக்குறிச்சி ஓடை பாலத்தின் வழியாகச் செல்லும் ராட்சத குடிநீா்க் குழாயில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெடிப்பு ஏற்பட்டு உடைந்தது. இதனால் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் ஓடையில் வீணாகி வருவது மட்டுமல்லாமல், அரியலூா் நகர மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
கடந்த மாதம் இவ்விடத்திலேயே குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணானது குறிப்பிடத்தக்கது. எனவே ராட்சத குடிநீா்க் குழாயை மாற்றி புதிய குழாயை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.