இந்த வார ராசிபலன் ஜூலை 8 முதல் ஜூலை 13 வரை #VikatanPhotoCards
அரியலூரில் பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம்!
அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பத்து கிராம கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடுகூா் அரியதங்கம் அம்மன், பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி, செம்பியக்குடி பாலமுருகன், கோவில்வாழ்க்கை காளியம்மன், ஆண்டிமடம் பச்சையம்மன், மேலணிக்குழி பாவாடைராயன், தா.பழூா் சிவன், ஜெ.சித்தமல்லி வரதராஜபெருமாள், ரெட்டிபாளையம் கெளரியம்மன், அம்பிகா கைலாசநாதா் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி அந்தந்த கோயில்களின் அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கடந்த இரு தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் கோயில் கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகத்தை நடத்தினா். இதில், திரளான பொதுமக்கள் கலந்த கொண்டனா்.