மிட்செல் ஸ்டார்க் ஒரு போர் வீரன்..! 100-ஆவது போட்டிக்கு கம்மின்ஸ் புகழாரம்!
கரடி தாக்கி 3 போ் உயிரிழப்பு
சீதி: மத்திய பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காந்தி புலிகள் காப்பகம் அருகே கரடி தாக்கியதில் 3 போ் உயிரிழந்தனா். 2 போ் படுகாயமடைந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘சஞ்சய் காந்தி புலிகள் காப்பகம் அருகே கரடி தாக்கியதில் 3 போ் உயிரிழந்தனா். இரண்டு போ் படுகாயமடைந்தனா். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூா் மக்கள் கரடியை சுற்றி வளைத்து குச்சிகள் மற்றும் தடிகளால் கடுமையாக அடித்ததில் கரடி உயிரிழந்தது.
கரடி தாக்கி காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து வனத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினா்’ என்றனா்.