கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
இந்தக் குழப்பமான உலகில்... பறந்து போ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!
நடிகை நயன்தாரா பறந்து போ திரைப்படம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் சிவா நடிப்பில் பறந்து போ திரைப்படம் ஜூலை 4 முதல் உலகம் முழுவதும் வெளியானது.
நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியன் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம் குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர்கள் - குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளைக் குறித்தும் பேசியிருந்தது.
மொத்த படமும் நகைச்சுவை பாணியில் இருந்ததால் இப்படமும் ரசிகர்களிடம் அசத்தலான வரவேற்பைப் பெற்றதுடன் இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்று எனப் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் படம் குறித்து கூறியதாவது:
குழப்பமற்ற இந்த உலகத்தில், உங்களுக்கு உண்மையான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு மலைக்குச் செல்லுங்கள். அவர்களுடன் நீங்களும் மலை ஏறுங்கள். அல்லது குளத்தில் நனையும்வரை விளையாடுங்கள்.
இல்லையெனில் ராம் சார் இயக்கியுள்ள பறந்து போ படத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். நாம் ஏற்கெனவே என்னவெல்லாம் இழந்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரியும்.
என்ன முக்கியம் என்பதை அழகாக நினைவுப்படுத்தியுள்ளார். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகான திரைப்படம் இதுதான் என்றார்.
