கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குகிறீர்களா?
நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு அவசியமோ அதேபோல தூக்கம் என்பதும் மனிதனுக்கு அத்தியாவசியத் தேவை. ஆனால் பலரும் இன்று தூக்கம் வருவதில்லை எனக் கூறி மிகவும் குறைந்த நேரமே தூங்குகின்றனர். தூக்கம் வரவில்லை என்று போனில் நேரம் செலவழிக்கின்றனர். ஆனால் தூக்கம் வராததற்குக் காரணமே அந்த மொபைல்போன்தான் என்று பலருக்கும் தெரிவதில்லை. சிலர் குறைவான நேரம் தூங்கினாலும் மற்றவர்களைப்போல உற்சாகமாக இருப்பார்கள். சிலர் நன்றாகத் தூங்கினால் மட்டுமே சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். இது ஒவ்வொருவரைப் பொருத்து மாறுபடுகிறது.
எப்படி இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளும் கூறுகின்றன.
தூக்கமின்மை அல்லது குறைவான நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?
5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
தூக்கமின்மையால் கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் பிரச்னைகள், தவறான முடிவெடுப்பது, மூளை செயல்திறன் குறைவது ஏற்படலாம்.
தூக்கமின்மையால் மந்தம், ஒருவித எரிச்சல் ஏற்படும். இதனால் மனரீதியாகவும் நீங்கள் பாதிக்கப்படலாம். மன அழுத்தம், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஹார்மோன் அளவை சீர்குலைத்து, பசி, வளர்சிதை மாற்றம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளைப் பாதிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும்.
போதுமான தூக்கமின்மையால் தூக்க கலக்கம் ஏற்படும். இதனால் வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இறுதியாக குறைவான நேரம் தூங்குபவர்களின் ஆயுள் காலம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல ஒரே நேரத்தில் தூங்க வேண்டும். தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என்றால் அதையே தினமும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆழ்ந்த தூக்கமும் வேண்டும். அதற்கேற்றவாறு தூங்குவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
தூக்கத்தைப் பாதிக்கும் மொபைல் போன் மற்றும் லேப்டாப் பயன்பாடு ஆகியவற்றை இரவில் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட வேண்டும்.
தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிட்டுவிடுவதும் நல்லது. எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ளலாம்.
நாள்தோறும் குறைந்தபட்ச உடற்பயிற்சி செய்வதும் உங்கள் தூக்கத்தை மேம்படுத்தும்.
தூக்கம் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அதற்கு தீர்வு காண வேண்டும்.
அனுபவித்தால் அல்லது அதிகப்படியான பகல்நேர தூக்கத்தை அனுபவித்தால், ஒரு சுகாதார நிபுணர் அல்லது தூக்க நிபுணரை அணுகவும்.