மாரீசன் முதல் பாடல் ரிலீஸ் தேதி!
வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான மாரீசன் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வந்ததில் வெற்றிக் கிடைத்திருக்கிறது.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நகைச்சுவையாக தொடங்கு இந்தப் படத்தின் டீசரில் இறுதியில் த்ரில்லர் படம்போல முடிவடைகிறது.
இந்தப் படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃபகத் ஃபாசிலின் பாடல் நாளை (ஜூலை 9) மாலை 4.05 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.