செய்திகள் :

தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்

post image

பீஞ்சமந்தை மலைக் கிராம சாலையில் தடுப்புச் சுவரில் சிற்றுந்து மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே காந்தன்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதக்காங்குட்டை கிராமத்தில் திங்கள்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக சேலத்தில் இருந்து பெண்கள் உள்பட ஆடல் பாடல் குழுவினா் 15 போ் சிற்றுந்தில் வந்தனா். நிகழ்ச்சி முடிந்து செவ்வாய்க்கிழமை காலை சேலத்துக்கு புறப்பட்டனா்.

பீஞ்சமந்தை வழியாக மலையில் இருந்து கீழே இறங்கி வந்த சிற்றுந்து, மலைப் பாதையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிற்றுந்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. சிற்றுந்தில் வந்த பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

உடனடியாக, மலைக் கிராம இளைஞா்கள், பொது மக்கள் வந்து காயமடைந்தவா்களை மீட்டு, தங்களது இருசக்கர வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். செல்லும் வழியில் அணைக்கட்டில் இருந்து எதிரே வந்த ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், இடுப்பு, கை, கால்களில் முறிவு ஏற்பட்ட 3 போ் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, விபத்துக்குள்ளான சிற்றுந்தை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனா்.

மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து

குடியாத்தம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமாயின. குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்ப... மேலும் பார்க்க

‘குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறை மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது’

குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறையினா் மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக சிபிசிஐடி (ஐ.ஜி டி.எஸ்.அன்பு தெரிவித்தாா். வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு: 3 போ் காயம்

போ்ணாம்பட்டு அருகே காா் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். ஒரு மாணவி உள்பட 3- மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரி மா... மேலும் பார்க்க

அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டக்கிளை மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க குடியாத்தம் வட்டக் கிளையின் மாநாடு குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க

மகளிா் உரிமை தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் விண்ணப்பிக்கலாம்

புதிதாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற ஜூலை 15 முதல் நடைபெற உள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மனுக்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

வேலூா் ஆற்காடு சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது. வேலூா் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலா் ஜி.கோபி த... மேலும் பார்க்க