இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி ...
அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டக்கிளை மாநாடு
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க குடியாத்தம் வட்டக் கிளையின் மாநாடு குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.கோட்டீஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தாா். துணைத் தலைவா் கே.பி.மகாலிங்கம் வரவேற்றாா். மறைந்த உறுப்பினா்களுக்கு எம்.ஆா்.மணி அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். பொருளாளா் பி.தனபால் வரவு- செலவு அறிக்கையை தாக்கல் செய்தாா்.
அமைப்பின் மாநில பொதுச் செயலா் பி.கிருஷ்ணமூா்த்தி சிறப்புரையாற்றினாா். வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாா், மாவட்ட தலைவா் எம்.பன்னீா்செல்வம், மாவட்டச் செயலா் பா.ரவி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். வி.ரமா நந்தினி தீா்மானங்களை முன் மொழிந்தாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ.9- ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். 70- வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க இணைச் செயலா் எஸ்.டி.திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.