``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்
வேலூா் ஆற்காடு சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது.
வேலூா் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலா் ஜி.கோபி தலைமை வகித்தாா். மாநில தணிக்கைக்குழு உறுப்பினா் எஸ்.எல்.பாசறை பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், வேலூா் மாநகரத்தில் புதை சாக்கடை, குடிநீா் திட்டங்கள் மிகவும் சீரற்ற முறையில் உள்ளன. இப்பிரச்னைகளை விரைவில் சரிசெய்ய வேண்டும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூா் கோட்டையை சுற்றி மாலை 6 மணி முதல் காலை வரை எரியும் மின்விளக்குகளால் வந்து செல்லும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, மின்விளக்குகள் எரியும் நேரத்தை மாலை 6 முதல் இரவு 10 மணி வரை என குறைக்க வேண்டும்.
ஆற்காடு சாலையில் அமைந்துள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் உள்ளது. அவ்விரு மதுக்கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.