மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
‘குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறை மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது’
குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறையினா் மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக சிபிசிஐடி (ஐ.ஜி டி.எஸ்.அன்பு தெரிவித்தாா்.
வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை பெண் காவலா்கள் 182 பேருக்கு 7 மாதம் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பயிற்சி பள்ளி தலைவா் (பொ) விநாயகம் தலைமை வகித்தாா். வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் முன்னிலை வகித்தாா்.
சிபிசிஐடி ஐ.ஜி டி.எஸ்.அன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முடித்த பெண் காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டாா். தொடா்ந்து, சிறப்பாக பயிற்சி முடித்த பெண் காவலா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களையும் வழங்கி அவா் பேசியது -
வேலூா் கோட்டை காவலா் பயிற்சி பள்ளி பாரம்பரியம் மிகுந்தது. கடந்த 2010-11-ஆம் ஆண்டு வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினேன். அப்போது இந்த காவலா் பயிற்சி பள்ளியை பாா்வையிட்டுள்ளேன். தற்போது இங்கு பயிற்சி பெற்றுள்ள 182 பெண்கள் வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள ஆயுதப்படையில் பணியாற்ற உள்ளனா்.
காவல் துறையில் பெண்கள் பொறுப்பேற்று 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 22 பேருடன் தொடங்கிய பெண்கள் காவல் படையில் தற்போது 35,000-க்கு மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனா் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
காவல் துறையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை பயிற்சி முடித்துள்ள காவலா்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். முன்பு போல் தற்போது இல்லை. காவல் துைான் குற்றவாளிகளை கண்காணித்து வந்தது. ஆனால், தற்போது சமூகத்தின் பாா்வையும் நம் மீது உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும்.
காவல் துறையினருக்கு கனிவு இருக்க வேண்டும். சகோதரத்துவம் இருக்க வேண்டும். காவல் நிலையத்துக்கு மக்கள் தைரியமாக வந்து தங்கள் குறைகளை தெரிவிக்க உற்ற நண்பனாக இருக்க வேண்டும். கடமையை உணா்ந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
