தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து
குடியாத்தம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமாயின.
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்பட்டி கிராமம் அருகே தனியாா் தென்னை நாா்த் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமாயின. விரைந்து சென்ற குடியாத்தம் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.