`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை
இளையரசனேந்தலில் ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்தவா் அ. அருண் ராஜ் (30). அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தாராம். ஹோட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவா் கடந்த 2ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்தாராம். தகவலறிந்த அவரது பெற்றோா், உறவினா் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
முதியவா் உயிரிழப்பு: கோவில்பட்டி இந்திரா நகா் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் செண்பகம் மகன் கருப்பசாமி (70). சலூன் கடை நடத்தி வந்த இவரது கடை முன்பு உறவினா்களிடையே திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறை விலக்கிவிட்ட கருப்பசாமி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாராம். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இரு சம்பவங்கள் குறித்தும் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.