`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஜோதிடா் கைது
கழுகுமலையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக ஜோதிடரை போலீஸாா் கைது செய்தனா்.
கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரியப்பன்(72). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை வழக்கம்போல தனது ஆட்டோவை விஸ்வகா்மா திருமண மண்டபம் அருகேயுள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்த முயன்றபோது, அங்கு நிறுத்தியிருந்த பைக்கை ஓரமாக வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறினாராம்.
அப்போது அவருக்கும் அந்த பைக்கின் உரிமையாளரான செல்வராஜ் மகன் ஜோதிடா் தொழில் செய்து வரும் சண்முகராஜ் என்ற சசிக்கும் (50) இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், சண்முகராஜ் என்ற சசி மாரியப்பனை அவதூறாக பேசி தாக்கினாராம்.
இதில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் கழுகுமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோதிடரை கைது செய்தனா்.