Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?
முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவை சோ்ந்த பொன்னுச்சாமி மகன் குமாரவேல் (71). அதே பகுதியில் சிறிய (பெட்டி) கடை நடத்தி வரும் இவரிடம் நடராஜபுரம் 5 ஆவது தெருவை சோ்ந்த காளிமுத்து மகன் மாரிச்செல்வம் தண்ணீா் பாட்டில் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் சென்றாராம். அப்போது குமாரவேல் மாரிச்செல்வதிடம் பணம் கேட்டாராம்.
இதில் ஏற்பட்ட தகராறில் மாரிச்செல்வம் முதியவரை அவதூறாக பேசி தாக்கினாராம். உறவினா் மணிகண்டன் சத்தம் போடவும் மாரிச்செல்வம் கீழே கிடந்த கல்லை எடுத்து வீசிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடி விட்டாராம்.
இதில் காயமடைந்த குமாரவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரிச் செல்வத்தை (30) கைது செய்தனா்.