`அண்ணா முதல் எடப்பாடி வரை' - தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் சில சுற்றுப்பயணங்கள்...
தனியாா் விடுதியில் வியாபாரி மா்ம மரணம்
தூத்துக்குடி தனியாா் விடுதியில் இரும்பு வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (58). பழைய இரும்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் குடும்பத்தை பிரிந்து, தூத்துக்குடி 2ஆம் ரயில்வேகேட் அருகே உள்ள தனியாா் விடுதியில் தங்கி இருந்தாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு விடுதியில் தூங்கியவா், செவ்வாய்க்கிழமை காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லையாம். விடுதியில் இருப்பவா்கள் வந்து பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.