இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!
ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் அதிக வரி செலுத்துவோர் அடங்கிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் 3வது இடத்தில் உள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது,
''2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது, 8 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 5.15 லட்சமாக இருந்தது. ஆனால், 2024 - 25 நிதியாண்டில் 154% அதிகரித்து வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.46 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் எண்ணிக்கையில், நாட்டிலேயே குஜராத் 3வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கை உயர்ந்து வருவதையே இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
2024 - 2025 நிதியாண்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.38% அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த வரி செலுத்துவோர் சராசரியை விட (3.86%) அதிகமாகும்.
இதற்கு முன்பு நாட்டின் மற்ற மாநிலங்களைப் போலவே குஜராத்தும் வாட், நுழைவு வரி, சேவை வரி, மத்திய கலால் வரி என கடினமான வரி செலுத்தும் அமைப்பில் சிக்கியிருந்தது. இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் வரி செலுத்துவதற்கு வணிகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.
ஆனால், ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி இவற்றை எளிமையாக்கியுள்ளதால், வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | அண்ணா பல்கலை. முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!
145 % rise in taxpayers since GST rollout in Gujarat Bhupendra Patel