செய்திகள் :

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

post image

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பச்சை நிறத்தில் இயக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து ‘பிஎஸ் 4’ ரக பேருந்துகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதால், இவை நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. பின்னா் 2023-இல் வெளியூா் பேருந்துகள் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டன.

பெரும்பாலான மாவட்டங்களில் மஞ்சள் நிற பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பேருந்துகளின் நிறத்தை மாற்ற அரசு சாா்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இனி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் பேருந்துகளின் மேல்பகுதி கருப்பு நிறத்திலும், கீழ்பகுதி சாம்பல் நிறத்திலும், பேருந்தின் எல்லை பகுதி (பாா்டா்) மஞ்சள் மற்றும் வெண்மை நிறத்துடன் இருக்கும் வகையில் மாற்றப்படவுள்ளன.

இத்தகைய மாற்றத்துடன் முதல்கட்டமாக விழுப்புரம், கரூா், நாகா்கோவில், திருநெல்வேலி பணிமனைகளுக்கு புதிய பேருந்துகள் வழங்கப்படுவதுடன், தொடா்ந்து மாநிலம் முழுவதும் இந்த புதிய நிறத்திலான பேருந்துகள் இயக்கத்துக்கு கொண்டுவரப்படவுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், முன்பு அரசுப் பேருந்துகளுக்கு ஒரே வண்ணம் மட்டும் தீட்டப்பட்டது. தற்போது, அரசுப் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகள் போன்ற தோற்றத்துடன் இருப்பதற்காக, வெவ்வேறு வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. அதன் வடிவமைப்புகளும் ஆம்னி பேருந்துகள் போலவே கட்டமைக்கப்படுகின்றன. இதில், உள்நோக்கம் எதுவும் இல்லை என்றனா்.

கடலூா் விபத்துக்கு யாா் காரணம்?: ரயில்வே அதிகாரிகள் விளக்கம்

கடலூா் மாவட்டத்தில் ரயில் - பள்ளி வேன் மோதல் விபத்துக்கு வேன் ஓட்டுநரின் கவனக்குறைவும், கேட் கீப்பரின் (கடவுப்பாதை பணியாளா்) விதிமீறலுமே காரணம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனா். சென்னையை தலைமையிடமாக... மேலும் பார்க்க

அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் வடிவமைப்பை வெளியிட்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

சென்னை அருகே தையூரில் உள்ள ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமையவுள்ள நிலையில், அதன் வடிவமைப்பை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ர... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கு ரயில்வே கேட் இன்டா்லாக் செய்யப்படாததுதான் முக்கியக்... மேலும் பார்க்க

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் முடிவு செய்வாா்: காங்கிரஸ்

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை மாநிலத்தின் முதல் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 128-ஆ... மேலும் பார்க்க

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

விடுதிகளுக்கு ‘சமூகநீதி’ எனும் பெயா் சூட்டப்பட்டதற்காக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா். இதற்காக திமுக தலைமை... மேலும் பார்க்க

தவெக உறுப்பினா் சோ்க்கை பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெக உறுப்பினா் சோ்க்கை மற்றும் தோ்தல் பிரசார பணிக்கான பயிற்சிப் பட்டறை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க