செய்திகள் :

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் முடிவு செய்வாா்: காங்கிரஸ்

post image

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

சென்னை மாநிலத்தின் முதல் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 128-ஆவது பிறந்த தினத்தையொட்டி சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், அதிகாரிகள் யாரும் என்னை வரவேற்கவில்லை, கோபுரத்தின் மேலே செல்லவும் அழைக்கவில்லை. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் விளக்கம் கேட்டுவிட்டு, கோயிலுக்கு மேலே சென்றால், அங்கு பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் இருந்தாா்.

வழக்கமாக குடமுழக்கு நடைபெறும் இடங்களில் அமைச்சா் இருந்தால் அவா் கொடியசைப்பாா். இல்லாவிட்டால் சட்டப்பேரவை உறுப்பினருக்கு அந்த உரிமை வழங்கப்படும். ஆனால் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான எனக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது. எனது தொகுதியில் மரபை மீறி குடமுழுக்கு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் மீது எவ்வித தவறும் இல்லை. அதிகாரிகள் சிலா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். ஒரு அதிகாரியின் தவறுக்காக ஒட்டுமொத்த அரசையும் குறை கூற முடியாது.

பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளாா். ராமதாஸுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. கூட்டணி குறித்து முதல்வா்தான் முடிவு செய்வாா் என்றாா் அவா்.

தொடா்ந்து, தமாகா மாநில தோ்தல் முறையீட்டுக் குழு தலைவா் ஈரோடு கௌதமன் உள்ளிட்டோா் காங்கிரஸில் இணைந்தனா். அதேபோல, தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு , செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்தாா்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதளவிண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவ... மேலும் பார்க்க

திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்... மேலும் பார்க்க

அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை: சீமான் ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி!

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து இன்று(ஜூலை 9) மாலை நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித்க... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக... மேலும் பார்க்க