செய்திகள் :

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

post image

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின்  பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-

கடந்த ஜூன் 20 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26 ஆம் ஆண்டிற்கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த கால அவகாசம் இன்றுடன்(09.07.2025) முடிவடைவதால் மாணவர்கள் நலன் கருதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படும்.

அதன் விவரம் பின்வருமாறு:

அரசு கல்வியியல் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி (பி.எட்.) மாணவர்கள் சேர்க்கை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இன்றுடன் (09.07.2025) கால அவகாசம் முடிவடைவதால் மாணவர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் தேதி 21.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.  31.07.2025 அன்று மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 04.08.2025 முதல் 09.08.2025-க்குள் மாணவர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.

13.08.2025 அன்று மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம்.

ஆகஸ்டு 20 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகள் தொடங்கும். 

இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

Higher Education Minister Cheliyan has informed that the online application registration for B.Ed. student admission in government and government-aided colleges of education has been extended until July 21st.

இதையும் படிக்க: திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க