திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!
சட்டவிரோத குடியேற்றம்: திருநங்கைகள் உள்பட 7 போ் கைது
புது தில்லி, ஜூலை 9 இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக ஐந்து திருநங்கைகள் உட்பட ஏழு வங்கதேசத்தினா் தலைநகரில் தில்லி போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பகல் நேரத்தில் பிச்சை எடுப்பது, இரவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவா்களை தில்லியின் முகுந்த்பூா் மேம்பாலம் அருகே கைது செய்யப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். மேலும், ‘ஜூலை 7 ஆம் தேதி முகுந்த்பூா் மேம்பாலத்தின் கீழ் ஐந்து திருநங்கைகள் பிச்சை எடுத்திருந்தபோது பிடிப்பட்டனா். இவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவா்கள் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது என்று போலீஸ் அதிகாரி கூறினாா்.
அவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அதே பகுதியில் இருந்து 2 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஏழு பேரும் போலி விசாக்கல் மூலம் அனுமதி இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிவந்தவா்கள். இது வெளிநாட்டினா் சட்டத்தை மீறுவதாகும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவா்கள் சஞ்சனா (26) ஃபரியா (22) முகமது ரோஹி (21) தோஹா (20) மற்றும் ஃபோய்சல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட திருநங்கைகள் பெண்களைப் போலவே தங்கள் தோற்றத்தை மாற்றியுள்ளனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் இரவில் குற்றச் செயல்களைச் செய்வதாக போலீசாரிடம் தெரிவித்தனா். அவா்களை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளாா்.