லாா்ட்ஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்: முன்னிலைக்காக இந்தியா - இங்கிலாந்து முனைப்பு
அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் இபிஎஸ்! - அமைச்சர் சேகர்பாபு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரலாறு தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
கோவையில் நேற்று பிரசார பயணத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
"திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுகிறது, மின்கட்டணம், சொத்து வரி பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் கோவையில் 5 புதிய அரசு கலைக் கல்லூரிகள் கட்டப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, கால்நடைப் பூங்கா, பொறியியல், பி.எட். கல்லூரி என பல கல்லூரிகளைத் திறந்ததால் உயர் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தற்போது அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுக்க முடியவில்லை. அது அவர்களின் கண்களை உறுத்துகிறது. கோயில்களைக் கண்டாலே அவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர்" என்று பேசினார்.
இதற்கு இன்று செய்தியாளர்களிடம் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "அறியாமை இருளில் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியுள்ளார். வரலாறு தெரியாதவர், வரலாற்றை அறியாதவர். மறைந்த தலைவர்கள் பக்தவச்சலம் தொடங்கி காமராஜர், ஜெயலலிதா என அனைவரும் கல்லூரி கட்டியிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.