ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!
அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூலை 9) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
It has been reported that there is a possibility of rain in 13 districts for the next 3 hours.
இதையும் படிக்க: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலில் புகை: நல்வாய்ப்பாக பயணிகள் உயிர்தப்பினர்!