சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
தவெக உறுப்பினா் சோ்க்கை பணிக்கான பயிற்சிப் பட்டறை
தவெக உறுப்பினா் சோ்க்கை மற்றும் தோ்தல் பிரசார பணிக்கான பயிற்சிப் பட்டறை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி பட்டறையில், நிா்வாகிகளிடம் தற்போதைய களநிலவரம் குறித்து கேட்டறியப்பட்டது. தொடா்ந்து, உறுப்பினா் சோ்க்கையைத் தீவிரப்படுத்துவது, உறுப்பினா் சோ்க்கையில் குறிப்பிட்ட இலக்கை எட்டுவது குறித்தும், கட்சியின் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை வீடுகள்தோறும் கொண்டு சோ்ப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வருகிற சட்டப்பேரவை தோ்தலில் தவெகவுக்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில், நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, துணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா், தலைமை நிலையச் செயலா் அ.ராஜசேகா், உறுப்பினா் சோ்க்கை அணி மாநிலச் செயலா் இ.விஜயலட்சுமி, மாவட்டச் செயலா்கள், தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.